“கண்களை மூடி அவுட் கொடுத்தார்களா அம்பையர்?” அம்பையர்களின் முடிவு குறித்து கொந்தளித்த ரசிகர்கள்!

Published by
Surya

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் டி-20 போட்டி, நேற்று நடைபெற்ற நிலையில், இதில் சூரியகுமார் யாதவ்க்கு அவுட் குடுத்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் விளையாண்டு வருகிறது. இந்த தொடரின் 4 ஆம் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அதிரடியாக வெற்றிபெற்று, 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனால் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் வெற்றிபெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்களிடம் அதிகரிக்க தொடங்கியது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சூரியகுமார் யாதவ், முதல் பந்திலே அற்புதமாக சிக்ஸர் அடித்து, அரைசதம் குவித்து அசத்தினார். மேலும், ஆடிய முதல் டி20 போட்டியில் அரைசதம் கடந்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அதிரடியாக ஆடிவந்த சூரியகுமார் யாதவ், சாம் கரண் வீசிய பந்தை லெக் சைடில் தூக்கி அடிக்க, டேவிட் மாலன் வசம் கேட்ச் ஆகியது. ஆனால் மாலன் கையில் சிக்கிய பந்து தரையில் தொட்டுது போல் ரீப்ளேக்கள் காட்டின. மூன்றாவது நடுவர் அரைமணிநேரம் ரீப்ளே செய்து பார்த்து விட்டு, சாப்ஃட் சிக்னல் என்று கூறி அவுட் கொடுத்தார். சூர்யகுமார், சாம் கர்ரன் வீசிய பந்தை தனது லெக் சைடில் தூக்கி அடிக்கவே, பந்து டேவிட் மலன் கைக்கு சென்றது.

ஆனால் அவர் பந்தை தரையில் வைத்து பிடிப்பது போல தெரிந்ததால், ரீப்ளே பார்த்தனர். நீண்ட நேரம் பார்க்கப்பட்ட இந்த ரிப்ளையின் முடிவில் சாப்ஃட் சிக்னல் எனக்கூறி அம்பையர் அவுட் கொடுத்தார். இவரின் அவுட் சர்ச்சையை கிளப்ப, அம்பையர் மீது முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் விமர்சித்து, இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால் அது நடந்த சிறிது நேரத்திலே வாஷிங்டன் சுந்தர், அர்ச்சரின் பந்தை ஓங்கி அடித்தார். அந்த பந்து, ரஷீத் கைக்கு செல்ல, அவரின் கால் சிக்ஸர் லைனில் இருந்தது. இதனை ரிப்ளை செய்து பார்த்த அம்பயர், அவுட் குடுத்து மீண்டும் அதிர்ச்சியாக்கினார். இதனால் கொந்தளித்த ரசிகர்கள், “இது நாட் அவுட்” என்றும், “எப்படி நீங்கள் அவுட் குடுக்கலாம்” என்றும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…

50 minutes ago

வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…

1 hour ago

Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்.. சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…

2 hours ago

பிரியாணி, குவார்ட்டர் கொடுத்துட்டு மேல கை வைங்க! போலீசிடம் உத்தரவு போட்ட குற்றவாளி!

கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…

2 hours ago

அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?

சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…

2 hours ago

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…

3 hours ago