“கண்களை மூடி அவுட் கொடுத்தார்களா அம்பையர்?” அம்பையர்களின் முடிவு குறித்து கொந்தளித்த ரசிகர்கள்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் டி-20 போட்டி, நேற்று நடைபெற்ற நிலையில், இதில் சூரியகுமார் யாதவ்க்கு அவுட் குடுத்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் விளையாண்டு வருகிறது. இந்த தொடரின் 4 ஆம் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அதிரடியாக வெற்றிபெற்று, 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதனால் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் வெற்றிபெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்களிடம் அதிகரிக்க தொடங்கியது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சூரியகுமார் யாதவ், முதல் பந்திலே அற்புதமாக சிக்ஸர் அடித்து, அரைசதம் குவித்து அசத்தினார். மேலும், ஆடிய முதல் டி20 போட்டியில் அரைசதம் கடந்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அதிரடியாக ஆடிவந்த சூரியகுமார் யாதவ், சாம் கரண் வீசிய பந்தை லெக் சைடில் தூக்கி அடிக்க, டேவிட் மாலன் வசம் கேட்ச் ஆகியது. ஆனால் மாலன் கையில் சிக்கிய பந்து தரையில் தொட்டுது போல் ரீப்ளேக்கள் காட்டின. மூன்றாவது நடுவர் அரைமணிநேரம் ரீப்ளே செய்து பார்த்து விட்டு, சாப்ஃட் சிக்னல் என்று கூறி அவுட் கொடுத்தார். சூர்யகுமார், சாம் கர்ரன் வீசிய பந்தை தனது லெக் சைடில் தூக்கி அடிக்கவே, பந்து டேவிட் மலன் கைக்கு சென்றது.
ஆனால் அவர் பந்தை தரையில் வைத்து பிடிப்பது போல தெரிந்ததால், ரீப்ளே பார்த்தனர். நீண்ட நேரம் பார்க்கப்பட்ட இந்த ரிப்ளையின் முடிவில் சாப்ஃட் சிக்னல் எனக்கூறி அம்பையர் அவுட் கொடுத்தார். இவரின் அவுட் சர்ச்சையை கிளப்ப, அம்பையர் மீது முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் விமர்சித்து, இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனால் அது நடந்த சிறிது நேரத்திலே வாஷிங்டன் சுந்தர், அர்ச்சரின் பந்தை ஓங்கி அடித்தார். அந்த பந்து, ரஷீத் கைக்கு செல்ல, அவரின் கால் சிக்ஸர் லைனில் இருந்தது. இதனை ரிப்ளை செய்து பார்த்த அம்பயர், அவுட் குடுத்து மீண்டும் அதிர்ச்சியாக்கினார். இதனால் கொந்தளித்த ரசிகர்கள், “இது நாட் அவுட்” என்றும், “எப்படி நீங்கள் அவுட் குடுக்கலாம்” என்றும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
That’s Not-Out IMHO. Let technology overrule it. https://t.co/3WmKpXMG6E
— Aakash Chopra (@cricketaakash) March 18, 2021
Violets are blue, so is Sky
Dear @icc ‘soft signal’ why?
#IndvEng #suryakumar #NotOut pic.twitter.com/cCDYXjpMVt— Wasim Jaffer (@WasimJaffer14) March 18, 2021
Third umpire while making that decision. #INDvENGt20 #suryakumar pic.twitter.com/JJp2NldcI8
— Virender Sehwag (@virendersehwag) March 18, 2021
How can this be out. When you are not sure whether the ball was taken cleanly after watching so many replays using top class technology and still go by the soft signal given by the on-field umpire. I think this rule needs to be revisited and changed. #INDvsENG pic.twitter.com/b5XMdH8qEz
— VVS Laxman (@VVSLaxman281) March 18, 2021