‘இனி இவர் தான்’ …சூரியகுமார் யாதவை பின்னுக்கு தள்ளிய டிராவிஸ் ஹெட்!!

Travis Head No.1 T20 Batter

டிராவிஸ் ஹெட்: இந்திய அணி தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது மேலும் நாளை மறுநாள் இங்கிலாந்து அணியுடன் விளையாடவும் இருக்கிறது.

இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வரும் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ் இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 139.25 என்ற ஸ்டிரைக் ரேட்டில், 149 ரன்கள் எடுத்துள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடிக்கு பெயர்போன சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடர் முழுவதும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், இந்த சுமாரான ஆட்டத்தினாலும் இந்திய அணி ஒரு சில போட்டிகளில் வெற்றியையும் பெற்றுள்ளது.

அதே நேரம் மறுமுனையில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. இருப்ப்பினும், தொடக்க வீரராக களமிறங்கும் டிராவிஸ் ஹெட் 158 ஸ்டிரைக் ரேட்டுடன் 255 ரன்கள் எடுத்திருக்கிறார். இதன் மூலம் இவரது சராசரியும் உயர்ந்துள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தால் தற்போது சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசையில் டிராவிஸ் ஹெட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த அக்டோபர் 30, 2022-ம் ஆண்டு முதல் சூர்யகுமார் யாதவ் சர்வேதச டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 பேட்டர்கள் தரவரிசைப் பட்டியல்

1. டிராவிஸ் ஹெட் – ஆஸ்திரேலியா – 844 புள்ளிகள்
2. சூர்யகுமார் யாதவ் – இந்தியா – 842 புள்ளிகள்
3. பிலிப் சால்ட் – இங்கிலாந்து – 816 புள்ளிகள்
4. பாபர் அஸாம் – பாகிஸ்தான் – 755 புள்ளிகள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்