சக வீரர்களை சுரேஷ் ரெய்னா இலங்கையில் பாடகராக மாறி மகிழ்வித்துள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.முத்தரப்பு டி20 தொடரான நிதாஹஸ் கோப்பைக்கான இலங்கையில் நடந்து வருகிறது. இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன. தோனி, கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் அதிகம் உள்ள அணியாக இந்தியா இத்தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இலங்கையிடம் தோற்றாலும், பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது. மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்யவே, தொடர் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. இன்று 2-வது முறையாக இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதற்கிடையே, வீரர்கள் அனைவரும் பயிற்சி நேரம் போக ஓய்வு நேரத்தில், இலங்கையில் ஜாலியாக வலம்வருகின்றனர்.
அதன்படி, நேற்று ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த இசைக்குழு பாலிவுட் பாடல்களை பாடிக்கொண்டிருந்தது. அப்போது இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் அவர்களுடன் சேர்ந்து பாடத் தொடங்கினார். பாலிவுட் சிங்கர் கிஷோர் குமாரின் கிளாசிக் பாடல் ஒன்றை பாடி சக வீரர்களை மகிழ்வித்தார். 1.55 நிமிடம் ஓடும் இந்த வீடியோவை பி.சி.சி.ஐ தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ரெய்னா ஓர் இசைப்பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இதற்கு முன்னர், “மீருதியா கேங்க்ஸ்டர்ஸ்” என்ற பாலிவுட் படத்தில் ரெய்னா ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…