என்னது நா செத்துட்டேனா…?பரவிய வதந்தி பதறிய ரெய்னா…!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் சுரேஷ் ரெய்னா. மேலும் இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் மற்றும் ரசிகர்ளால் கொண்டாடப்படுபவர்.

Image result for suresh raina imagesதற்போது இந்திய அணியில் இடம்கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரைப் பற்றி பல  வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளது.இதற்கிடையில் ரெய்னா கார் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார் என்பது      இந்த வதந்தி.இந்த செய்தியால் அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.இதனால் சுரேஷ் ரெய்னாவுக்கு தினந்தோறும் போனில் நண்பர்கள் விசாரிக்க தொடங்கி விட்டனர்.

Related image

இந்த பரவி வரும் வதந்திக்கு  சுரேஷ் ரெய்னா  பாதுகாப்பாக உயிரோடுதான் இருக்கிறேன் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இந்த வதந்தி குறித்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாகவே  நான் கார் விபத்தில் இறந்துவிட்டதாக ஒரு போலியான செய்தி பரவி வருகிறது.

Image result for suresh raina images

இது என்னைக் காயப்படுத்தி விட்டது .மேலும் இது எனது குடும்பத்தையும், நண்பர்களையும் மிகுந்த கவலையடைய வைத்துவிட்டது. இதுபோன்ற செய்திகளை புறக்கணித்து விடுங்கள்.அந்த கடவுள் அருளோடு நான் நன்றாக இருக்கிறேன். மேலும் யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தவறான காட்சிகளை நீக்குமாறு போலீஸில் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக விரைவில் கடுமையான ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என்று  நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.இதனால் பரவி வந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்