எப்பவும் நான் தான் அதுல ‘கிங்’! ரோஹித், கோலியை மிஞ்சிய ரெய்னா!

Published by
பால முருகன்

Suresh Raina ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை மிஞ்சி சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட அவர் செய்த சாதனைகள் எல்லாம் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம். அப்படி தான் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றும் கூட மிகப்பெரிய சாதனை பட்டியலில் அவருடைய பெயர் முதலிடத்தில் இருக்கிறது.

அது என்ன சாதனை பட்டியல் என்றால் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் தான். சுரேஷ் ரெய்னா எப்போதுமே தன்னிடம் ஒரு பந்து வந்தால் அதனை விடாமல் கச்சிதமாக பிடிக்க கூடிய ஒரு அட்டகாசமான ஒரு பீல்டர். இதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை.

கிரிக்கெட்டில்  சிறந்த பீல்டரில் ஒருவராக இருக்கும் அவர் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 109 கேட்ச்கள் பிடித்து அதிகம் கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் எல்லாம் அவருக்கு அடுத்ததாக இருக்கிறார்கள்.

ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்கள் :

  1. சுரேஷ் ரெய்னா (205 போட்டிகள்) – 109 கேட்ச்
  2. விராட் கோலி (239 போட்டிகள்) – 108 கேட்ச்
  3. கீரன் பொல்லார்ட் (189 போட்டிகள் ) – 103 கேட்ச்
  4. ரோஹித் சர்மா (244 போட்டிகள் ) – 99 கேட்ச்
  5. ரவீந்திர ஜடேஜா ( 270 போட்டிகள்) – 97 கேட்ச்

இந்த பட்டியலில் 109 கேட்ச்கள் பிடித்து ரெய்னா முதலிடத்தில் இருக்கும் நிலையில், அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே, அடுத்தாக விராட் கோலி இன்னும் 2 கேட்ச்கள் பிடித்தால் அந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

2 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

4 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

6 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

7 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

8 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

8 hours ago