எப்பவும் நான் தான் அதுல ‘கிங்’! ரோஹித், கோலியை மிஞ்சிய ரெய்னா!
Suresh Raina ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை மிஞ்சி சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட அவர் செய்த சாதனைகள் எல்லாம் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம். அப்படி தான் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றும் கூட மிகப்பெரிய சாதனை பட்டியலில் அவருடைய பெயர் முதலிடத்தில் இருக்கிறது.
அது என்ன சாதனை பட்டியல் என்றால் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் தான். சுரேஷ் ரெய்னா எப்போதுமே தன்னிடம் ஒரு பந்து வந்தால் அதனை விடாமல் கச்சிதமாக பிடிக்க கூடிய ஒரு அட்டகாசமான ஒரு பீல்டர். இதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை.
கிரிக்கெட்டில் சிறந்த பீல்டரில் ஒருவராக இருக்கும் அவர் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 109 கேட்ச்கள் பிடித்து அதிகம் கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் எல்லாம் அவருக்கு அடுத்ததாக இருக்கிறார்கள்.
ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்கள் :
- சுரேஷ் ரெய்னா (205 போட்டிகள்) – 109 கேட்ச்
- விராட் கோலி (239 போட்டிகள்) – 108 கேட்ச்
- கீரன் பொல்லார்ட் (189 போட்டிகள் ) – 103 கேட்ச்
- ரோஹித் சர்மா (244 போட்டிகள் ) – 99 கேட்ச்
- ரவீந்திர ஜடேஜா ( 270 போட்டிகள்) – 97 கேட்ச்
இந்த பட்டியலில் 109 கேட்ச்கள் பிடித்து ரெய்னா முதலிடத்தில் இருக்கும் நிலையில், அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே, அடுத்தாக விராட் கோலி இன்னும் 2 கேட்ச்கள் பிடித்தால் அந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.