ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
மிஸ்டர் ஐபிஎல் என அனைவராலும் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இம்முறை ஐபிஎல் ஏலத்தில் அவரது பழைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வாங்கவில்லை. இதை அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார். ஐபிஎல் 2022 இன் மெகா ஏலத்தில், சுரேஷ் ரெய்னா விற்கப்படாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் அணி ஒன்று சுரேஷ் ரெய்னாவுக்கு தங்கள் அணியில் இடம் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னாவின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் இந்த ஐபிஎல் சீசனில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் ஜெர்சியில் உள்ளார். இதையடுத்து, சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2022ல் நுழையப் போகிறார் என்றும், அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெறலாம் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. ரெய்னாவின் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னா:
ஐபிஎல் வரலாற்றில் ஆரம்பம் முதலே அபாரமான பலத்தை வெளிப்படுத்திய சில பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்த பேட்ஸ்மேன்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். முதல் சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக 2 சீசன்களில் விளையாடினார். மொத்தம் 205 போட்டிகளில் விளையாடி 5528 ரன்கள் எடுத்துள்ளார். ரெய்னா 1 சதத்துடன் 39 அரை சதங்களை விளாசி உள்ளார்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விஷயம் இன்னும் ஓயாத ஒரு சர்ச்சையாக…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ரூ.60,440க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம்,…
கேரளா : வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராம அங்கு வந்த…
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…