மட்டைக்கு பதிலாக மைக்கை கையில் எடுக்கும் சுரேஷ் ரெய்னா!

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா அவதாரம்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக உருவெடுக்கவுள்ளார். மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இந்தமுறை சென்னை உட்பட எந்த அணியும் ஐபிஎல் போட்டியில் விளையாட ஏலம் எடுக்கவில்லை.
ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து அனைத்து சீசன்களிலும் பங்கேற்று வந்த ரெய்னா, முதல் முறையாக தொடரில் பங்கேற்காத சூழல் ஏற்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்திருந்த ரசிகர்களுக்கு தற்போது உற்சாக செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக (Commentator) சுரேஷ் ரெய்னா களமிறங்க உள்ளதாக ஸ்டார்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் வர்ணனையாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025