MS Dhoni ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்குகிறது என்பது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் மற்றோரு பக்கம் கேட்பான் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலரும் தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தோனியின் ஆட்டத்தை பார்க்க தான் ஆவலுடன் காத்துஇருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த ஆண்டு அவரை பார்த்தவுடன் எனக்கு சிறந்த விஷயம் என்றுபடுவது அவர் ஃபிட்டாக இருப்பதுதான்.
எனவே, நான் பயிற்சியில் பார்த்தவரை சொல்கிறேன் அவர் நல்ல பார்மில் இருப்பதாக தெரிகிறது. கண்டிப்பாக இந்த முறை அவர் சூப்பராக விளையாடுவார். உலகமே அவர் கடைசி இரண்டு ஓவர்கள் அல்ல ஐந்து ஓவர்கள் பேட் செய்வதை விரும்புகிறது. என்னை பொறுத்தவரை நான் எதிர்பார்ப்பது அவர் அதிக வரிசையில் பேட் செய்வதைப் பார்க்க விரும்புகிறேன். அதாவது கடைசி ஓவர்களில் விளையாடாமல் சற்று முன்னாடி வந்து விளையாடினாள் நன்றாக இருக்கும்.
அப்படி விரைவாக அவர் பேட்டிங் செய்ய வந்தால் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு நன்றாக செட்டில் ஆன பிறகு நாம் நிறைய ஹெலிகாப்டர் சிக்ஸர்களைப் பார்க்கலாம். இந்த முறை தோனி கேப்டனாக விளையாடமாட்டார். எனவே அவர் சற்று நிதானமாக எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் பேட்டிங் செய்யலாம். அவருடைய ஆட்டத்தை ரசிகர்களை பார்க்க காத்திருப்பது போல நானும் காத்திருக்கிறேன்” எனவும் சுரேஷ் ரெய்னா தோனி பற்றி தெரிவித்துள்ளார்.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…