தோனி கிட்ட இருந்து இதை தான் எதிர்பார்க்கிறேன்! மனம் திறந்த ரெய்னா!

suresh raina and ms dhoni

MS Dhoni ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்குகிறது என்பது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் மற்றோரு பக்கம் கேட்பான் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலரும் தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.

READ MORE – ருதுராஜிக்கு கேப்டன் பதவி கொடுத்ததில் ஆச்சிரியம் இல்லை… ரவிச்சந்திரன் அஸ்வின்!

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தோனியின் ஆட்டத்தை பார்க்க தான் ஆவலுடன் காத்துஇருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த ஆண்டு அவரை பார்த்தவுடன் எனக்கு சிறந்த விஷயம் என்றுபடுவது அவர் ஃபிட்டாக இருப்பதுதான்.

READ MORE – IPL 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த 5-வது தமிழ் வீரர்..! யார் தெரியுமா?

எனவே, நான் பயிற்சியில் பார்த்தவரை சொல்கிறேன் அவர் நல்ல பார்மில் இருப்பதாக தெரிகிறது. கண்டிப்பாக இந்த முறை அவர் சூப்பராக விளையாடுவார். உலகமே  அவர் கடைசி இரண்டு ஓவர்கள் அல்ல ஐந்து ஓவர்கள் பேட் செய்வதை  விரும்புகிறது. என்னை பொறுத்தவரை நான் எதிர்பார்ப்பது அவர் அதிக வரிசையில் பேட் செய்வதைப் பார்க்க விரும்புகிறேன். அதாவது கடைசி ஓவர்களில் விளையாடாமல் சற்று முன்னாடி வந்து விளையாடினாள் நன்றாக இருக்கும்.

read more- விராட் கோலியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை – கிறிஸ் கெயில் புகழாரம்.!

அப்படி விரைவாக அவர் பேட்டிங் செய்ய வந்தால் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு நன்றாக செட்டில் ஆன பிறகு நாம் நிறைய ஹெலிகாப்டர் சிக்ஸர்களைப் பார்க்கலாம். இந்த முறை தோனி கேப்டனாக விளையாடமாட்டார். எனவே அவர் சற்று நிதானமாக எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் பேட்டிங் செய்யலாம். அவருடைய ஆட்டத்தை ரசிகர்களை பார்க்க காத்திருப்பது போல நானும் காத்திருக்கிறேன்” எனவும் சுரேஷ் ரெய்னா தோனி பற்றி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong