சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தான் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் செல்ல ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி தொடங்கும் முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, வர்ணனையாளராக ரசிகர்கள் முன் காட்சியளித்தார்.
அவரை கண்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், மஞ்சள் நிற ஜெர்சியில் தங்களை மிஸ் செய்வதாகவும், உங்களை இப்படி பாப்போம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை எனக்கூறி, ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைத்தனர். அதனைதொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேட்டியளித்த ரெய்னா, இந்நிகழ்ச்சிக்கு வரும் முன்னதாக மைதானத்தை கடந்து வரும்பொழுது, தான் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் செல்ல ஆசைப்படுவதாக கூறியுள்ளார். ரெய்னாவின் இந்த பேச்சு, சென்னை ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏலத்தின்போது அவரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதன் காரணமாக அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…