‘ரோஹித்-கோலி இதை செஞ்சுருக்கணும்’! கருத்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா!

Suresh Raina

சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, ரோஹித் மற்றும் கோலி இருவரும் இதை செய்திருக்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடரானது வரும் செப்-5 முதல் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான 4 அணிகளைச் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும், இந்த 4 அணிகளிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர்க்கு பிசிசிஐ விடுப்பு அறிவித்திருந்தது. இந்த தொடருக்கான அணிகளை அறிவித்த போதே பலரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த தொடரை விளையாட வேண்டும் எனக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகக் கவுதம் கம்பீரும் தொடக்கத்தில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களை துலீப் ட்ராபியில் விளையாட அறிவுறுத்துவேன் எனக் கூறியிருந்தார். ஆனால், துலீப் கோப்பைக்கான அணிகளில் இவர்கள் இடம்பெறாததால் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரோஹித் மற்றும் கோலி இந்த தொடரில் விளையாட வேண்டும் அப்போது தான் ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ளும் போது கைகொடுக்கும் எனக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

ரோஹித் – கோலி குறித்து விருப்பம் தெரிவித்த ரெய்னா ..!

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னாவும் அவரது கருத்தைத் தெரிவித்திருந்தார். தனியார் தொலைக்காட்சியில் இது குறித்துப் பேசிய அவர், “ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணி எந்த சிவப்பு பந்து தொடரையும் விளையாடவில்லை. இதனால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் துலீப் டிராபியில் விளையாடி இருக்க வேண்டும்.

நீங்கள் ஒரு பெரிய தொடருக்கு விளையாடச் செல்கிறீர்கள் என்றால் அதற்கான பயிற்சி முன்கூட்டியே உங்களுக்குத் தேவை. அதே சமயத்தில் இருவரும் கிரிக்கெட் விளையாட்டில் பக்குவமானவர்கள். எந்த நேரம் என்ன தேவை என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதே நேரம் குடும்பத்திற்காகவும் நேரம் செலவிடுவது முக்கியம் தான்”, என்று சுரேஷ் ரெய்னா பேசி இருந்தார்.

ருதுராஜ் குறித்து பேசிய ரெய்னா ..!

மேலும், சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்வாடுக்கும் ஐபிஎல் தொடரில் அடுத்ததாக என்ன செய்யலாம் என அட்வைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி எப்படி விளையாடினார் என்பதை நினைவில் வைத்து ருதுராஜ் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். இன்னும் ஒரு ஆண்டு கூடுதலாக தோனி ருதுராஜூடன் அணியில் இருக்க வேண்டும். மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பிலும் மற்றும் பேட்டிங்கிலும் தன்னால் முடிந்த வரையில் சிறப்பாகவே இருந்தார்”, என்று அவர் கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்