தோனியை தொடர்ந்து தனது ஓய்வினை அறிவித்த சுரேஷ் ரெய்னா.! மனமுடைந்த ரசிகர்கள்.!
சர்வேதேச போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தல, சின்ன தல ஒரே நாளில் ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்ட தோனி, எனக்கு தொடக்கத்திலிருந்து, 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி எனவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில், தோனியை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக சுரேஷ் ரெய்னாவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தோனியின் பதிவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, தானும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஒரே நாளில் இருவரும் ஓய்வு பெரும் செய்தியை அறிந்த ரசிகர்கள் மிகவும் மனமுடைந்தனர்.