ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்து விட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து உடனடியாக தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா.
இருந்தும் இவர்கள் இருவரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்தனர். இந்நிலையில், தற்போது அந்த உள்ளூர் தொடர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூட இவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டதன் பின்னணியில் சில தகவல்கள் உலா வருகின்றன. அதாவது, இந்திய சர்வதேச, உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று இருப்பவர்கள், வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க அனுமதி இல்லை.
அதன் காரணமாக தான் சுரேஷ் ரெய்னா இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்று, வெளிநாட்டு உள்ளூர் தொடர்களில் வீரராகவோ, அல்லது ஆலோசகராகவோ பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…