‘பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணணும்’! இந்திய மகளிர் அணிக்கு ஏற்பட்ட அவல நிலை?
மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி 2 வெற்றிகள், 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடத்தில் இருந்து வருகிறது.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடையும் கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில், நேற்று இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால், இந்திய அணியின் அரை இறுதி சுற்று கேள்வி குறியாக தற்போது மாறி இருக்கிறது.
குரூப்-A பிரிவில் இந்திய மகளிர் அணி 4 புள்ளிகளுடன், +0.322 ரன்ரேட்டுடன் 2-ஆம் இடத்தில் இருந்து வருகிறது. அதே நேரம், நியூஸிலாந்து அணியை பார்க்கும் போது 4 புள்ளிகளுடன், +0.282 ரன்ரேட்டுடன் 3-ஆம் இடத்தில் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில், நியூஸிலாந்து அணிக்கு, பாகிஸ்தான் மகளிர் அணியுடன் கடைசி லீக் போட்டியானது இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய மகளிர் அணியால் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். ஒரு வேளை நியூஸிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றால் இந்திய அணி இந்த தொடரிலிருந்து வெளியேறி வீட்டுக்கு செல்ல வேண்டியது தான்.
இதன் காரணமாக இன்று நடைபெறும் நியூஸிலாந்து-பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும் என பாகிஸ்தான் அணிக்காக இந்திய ரசிகர்கள் சப்போர்ட்டுடன், பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். இது போன்ற நிலை பல முறை ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரில் நடைபெற்றதுண்டு, அதே போல ஒரு நிலை தற்போது இந்திய மகளிர் அணிக்கும் ஏற்பட்டுளள்து.
இதனால், இன்று நடைபெறும் போட்டிக்கு நியூஸிலாந்து, பாகிஸ்தான் ரசிகர்களைத் தாண்டி இந்திய ரசிகர்களிடமிருந்தும் எதிர்பார்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது. இதனால், இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெரும், எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.