சூப்பர் கம்பேக் ! 327 நாட்களுக்கு பின் களமிறங்கி பல சாதனைகளை படைத்த பும்ரா!
கடந்த ஆண்டு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜஸ்பிரித் பும்ரா சிறுது காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வு பெற்று வந்தார். 11 மாதங்கள் அதாவது 327 நாட்களுக்கு பிறகு நேற்று அயலர்ந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடியதன் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு பும்ரா திரும்பினார்.
காம்பேக் என்றால் இப்படி தான் இருக்கவேண்டும் என்கிற அளவிற்கு நேற்று நடைபெற்ற போட்டியில் பும்ரா ஒரே ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி அனைவரையும் அதிர வைத்தார் என்றே கூறலாம். இதுமட்டுமின்றி, நேற்று போட்டியில் பும்ரா சில சாதனைகளையும் படைத்துள்ளார். அது என்ன சாதனைகள் என்பதை பற்றி பார்க்கலாம்.
முதல் கேப்டன்
அயர்லாந்துக்கு எதிரான 1வது டி20 போட்டியில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தியதன் மூலம், ஜஸ்பிரித் பும்ரா டி20 களில் இந்தியாவின் கேப்டனாக இருந்த 11வது வீரர் மற்றும் பந்துவீச்சாளர் டி20 சர்வதேசப் போட்டியில் பந்துவீச்சாளராக கேப்டனாக பொறுப்பேற்ற முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.
முதல் இந்திய வீரர்
நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில் பும்ரா தனது 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஜஸ்பிரித் பும்ரா தனது முதல் டி20 கேப்டனாக அறிமுகமான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் ஆனார். பும்ராவுக்கு முன், MS தோனி, விராட் கோலி உட்பட 10 மற்ற வீரர்கள் டி-20 போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தனர், ஆனால் அவர்களில் யாரும் கேப்டன்சி அறிமுகத்தில் POTM விருதை வாங்கமுடியவில்லை.
அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா
மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்கள் எடுத்ததன் மூலம் மொத்தமாக டி20 போட்டிகளில் 72 விக்கெட்கள் எடுத்தார். இதன் மூலம், டி20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்தியாவின் நான்காவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 72 டி20 விக்கெட்டுகளை எடுத்திருந்த நிலையில், அவரை பும்ரா சமன் செய்தார்.
327 நாட்களுக்கு பின் போட்டியில் விளையாடிய பும்ரா மேற்கண்ட சாதனைகளை படைத்தது சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளார். மேலும், அயலர்ந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்தது. அடுத்தாக 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
6.5 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனையடுத்து, டக்வத் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.