டி20I: நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின், நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்றில் விளையாடும் இந்திய அணி உட்பட பல அணிகளுக்கு பிரச்சனை நிலவும் சூழ்நிலை உள்ளது.
இந்த ஆண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைதற்கு முன்பே சூப்பர் 8 சுற்றில் விளையாட போகும் 8 அணிகள் யார் யார் என்று தெரிந்துவிட்டது. இந்த அணிகளை தற்போது 2 பிரிவுகளாக பிரித்து அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்று என்பது நடைபெற இருக்கிறது.
நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும், இரண்டாம் பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த சூப்பர் 8 சுற்றானது வருகிற ஜூன்-19 ம் தேதி தொடங்குகிறது, அதில் முதல் போட்டியாக அமெரிக்கா அணியும் தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளனர்.
தற்போது இந்த சூப்பர் 8 சுற்று பற்றிய ஒரு அப்டேட் கிடைத்துள்ளது, அது என்னவென்றால் இந்த சூப்பர் 8 சுற்றுகளில் நடைபெறும் போட்டிகள் அனைத்துமே வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள 4 மைதானங்களில் தான் நடைபெறும். இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெறும் இடங்களில் தற்போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிலும், வருகிற 24ம் தேதி அன்று செயின்ட் லூசியாவில் நடைபெற இருக்கும் இந்திய-ஆஸ்திரேலியா அணிகள் விளையாட இருக்கும் போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒருவேளை மழையின் காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டால் இந்த 2 அணிகளுமே பெரிய அளவில் சிக்கலை சந்திப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, ஏற்கனவே லீக் போட்டிகளில் பல போட்டிகள் மழையின் காரணமாக போட்டிகளை ஐசிசி கைவிட்டது. அதுவே பெரிய சர்ச்சைகளுக்கு உள்ளானது. தற்போது, சூப்பர் 8 சுற்றிலும் இப்படி நடந்தால் பெரிய பெரிய அணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. சூப்பர் 8 சுற்றுகளிலும் மழையால் போட்டி கைவிட்டால் 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளிகளை வழங்குவார்கள்.
இதனால், புள்ளிப்பட்டியலிலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்திய அணி லீக் போட்டியிலேயே ஒரு போட்டியை மழையின் காரணமாக தவறவிட்டனர் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் சூப்பர் 8 சுற்றில் அப்படி நடந்தால் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழக்க நேரிடலாம் என இந்திய அணி ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…