கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 22 ஆம் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிகள் மோதியது.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கலைமற்ங்கிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 201 ரன்கள் அடித்தது.
இதில் அதிகபட்சமாக பைர்ஸ்டோவ் 97 ரன்களும், வார்னர் 52 ரன்கள் அடித்தனர். 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி யின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – மயங்க அகர்வால் களமிறங்கினார்கள். 9 ரன்களில் மயங்க அகர்வால் வெளியேறினார்.
அவரையடுத்து களமிறங்கிய சிம்ரன் சிங் 11 ரன்களில் வெளியேற, ராகுலும் 11 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய நிகோலஸ் பூரண் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரஷீத் கானின் பந்துவீச்சை தாங்காமல் 77 ரன்களில் அவர் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இறுதியாக 16.3 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி, தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் அடித்து 69 ரன்கள் அடித்து ஹைதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் ரஷீத் கான் தலா 3 விக்கெட்களும், டி.நடராஜன் மற்றும் கலீல் அஹமத் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…