SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
பிளே ஆப் சுற்றுக்கு செல்ல இந்த இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் சீட்டுக்கட்டு போல மும்பை பந்துவீச்சில் அடுத்தடுத்து SRH வீரர்கள் அவுட் ஆகி வெளியேறினர். டிராவிஸ் ஹெட் (0), இஷான் கிஷான் (1), அபிஷேக் சர்மா (8), நிதிஷ் குமார் ரெட்டி (2), அனிகேத் வர்மா (12) என அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
ஒற்றை ஆளாக சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை ஹென்ரிச் கிளாசென் ஒரு டீசன்ட் ஸ்கோரை நோக்கி இழுத்து சென்றார். அவர் 44 பந்தில் 9 பவுண்டரிகள் , 2 சிக்ஸர்கள் விளாசி 71 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் அவுட் ஆகினார். அவருக்கு துணையாக இம்பேக்ட் பிளேயர் அபினவ் மனோகர் 37 பந்தில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் SRH அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 144 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்து களமிறங்க உள்ளது.