இன்று பலபரீட்சையில் வார்னர் vs கே.எல் ராகுல்-அனல் பறக்குமா??
IPL2020 இன்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் கிங்ஸ் வெலன் பஞ்சாப் அணிகள் இன்று பலபரீட்சை நடத்துகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் ,கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகிறது.ஹைதராபாத்அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவுச் செய்துள்ளது.அதே போல பஞ்சாப் அணியும் விளையாடிய 5 ஆட்டங்களில் 1 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.இரு அணிகளும்இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேரான ஆட்டத்தில் ஹைதராபாத் 10 போட்டிகளில் வெற்றியும்,பஞ்சாப் அணி மீதமுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவர் வீரர் வார்னர் தலைமையிலான அணி தற்போது நல்ல ஆட்டத்தை ஆடுகளத்தில் வெளிப்படுத்தி வருகிறது.இதே போல இளம்வீரர் கே.எல் ராகுலும் அனுபவத்தினை அபுதாபி மைதானம்அவருக்கு அளித்து வருகிறது.இந்நிலையில் தொடர் தோல்வியிலிருந்து வெற்றி நோக்கி நடைபோட பஞ்சாப் அணியும்,தனது முழு பலத்தை வெளிப்படுத்தி வரும் ஹைதராப் அணியும் களமிரங்குவதால்
இரு அணிகளும் இன்று மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.