சன்ரைசஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ள இன்றயை ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்றயை 3 வது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்க முதலே அதிரடி காட்டி விளையாடியது, தொடக்க ஆட்டக்காரர் நிதீஷ் ராணா (80), ராகுல் திரிபாதி (53) ஆகியோர் அரைசதம் அடித்து ஹைதராபாத்திற்கு எதிராக ஆறு விக்கெட்டுக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.
சன்ரைசஸ் ஹைதராபாத் பந்து வீச்சாளர்களான ரஷீத் கான் மற்றும் நபி தலா 2 விக்கெட்களையும் .தமிழக வீரர் நடராஜன் மற்றும் புவனேஸ்வர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
188 ரன் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் பாண்டே 41 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் பல சிக்சர்களுடன் 54 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார், பைர்ஸ்டோ 55 ரன்கள் எடுத்தார், சமத் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார்.20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 177 ரன்களை எடுத்து 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கே.கே.ஆர் வேகப்பந்து வீச்சாளர் பிரசிட் கிருஷ்ணா 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்,ஷாகிப் அல் ஹசன், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…