இந்தியாவில் அதிகமானோர் தோனியை நேசிக்கிறார்கள்..! சுனில் கவாஸ்கர்..!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கரை கேப்டன் தோனி மிஞ்சி விட்டதாக கூறியுள்ளார்.
அதில் சுனில் கவாஸ்கர் பேசுகையில் தோனி தனது 14 ஆண்டு கால சர்வதேச வாழ்க்கையில் மிகவும் ஏராளமாக சில பாராட்டுகளைப் பெற்று மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். தோனி கடந்த 2007ம் ஆண்டு t20 போட்டி மற்றும் 2011 உலக கோப்பை மற்றும் அனைத்து 13 ஐசிசி சம்பியன்ஸ் டிராபி ஆகிய போட்டிகளில் அவர் சாதனையை நிகழ்த்தியது, எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் செய்ய இயலாத சாதனை என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் தோனியை மிகவும் அதிகமான ரசிகர்கள் நேசிக்கின்றனர். மேலும் சச்சின் டெண்டுல்கர் மும்பை மற்றும் கொல்கத்தாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள். விராட் கோலிக்கு டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தோனியை பற்றி பேசினால் இந்திய முழுவதுமே பேசும், அவரை போல் ஒரு சிறந்த கேப்டன் தற்பொழுது இல்லை, மேலும் அணி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் அணியை பொறுமையாக வழிநடத்தி கொண்டு செல்வர் என்று கூறியுள்ளார்.