பெரும் சோகம்…முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுதிர் நாயக் காலமானார்.!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் மும்பையில் புதன்கிழமை காலமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பிரபல பயிற்சியாளருமான சுதிர் நாயக் காலமானார். அவருக்கு வயது 71. கடந்த 1970-71 சீசனில் சுதிர் நாயக் தலைமையிலான மும்பை அணி ரஞ்சிக் கோப்பையை வென்றது.
சமீபத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து, காயமடைந்த சுதிர் நாயக் மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின், கோமா நிலைக்கு சென்ற நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சச்சின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” ஸ்ரீ சுதிர் நாயக் ஜியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” என பதிவிட்டுள்ளார்.
My heartfelt condolences to Shri Sudhir Naik ji’s family and friends. His contributions to cricket will always be remembered. May his soul rest in peace.
— Sachin Tendulkar (@sachin_rt) April 5, 2023