டி20 உலகக்கோப்பை 2024 : ஜூன் 17 -ஆம் தேதி கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நேபாளம் அணியும் வங்காளதேசம் அணியும் மோதியது. இந்த போட்டியில் நேபாளத்திற்கு எதிராக வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் மற்றும் நேபாள கேப்டன் ரோஹித் இடையேயான வாக்கு வாதம் பெரிய அளவில் பேசும்பொருளாகி இருக்கிறது. நேபாளம் அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தத்தளித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான குஷால் புர்டெல் மற்றும் அனில் சாஹ் ஆகியோரை ஏற்கனவே வெளியேற்றிய டான்சிம் ரோஹித்துக்கு எதிராக இரண்டு டாட் பால்களை எடுத்தார்.
எனவே, நேபாளம் அணி 107 ரன்களைத் துரத்திய மூன்றாவது ஓவரில், ஓவர் முடிந்ததும், டான்சிம் மற்றும் ரோஹித் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைக்க தொடங்கினார்கள். பின் இருவரும் நேருக்கு நேர் கோபத்துடன் வந்து உனக்கு என்ன பிரச்சனை என்ன என்ன? என முறைத்துக்கொண்டு மோதிக்கொண்டனர். பின் சண்டை முற்றிவிடக்கூடாது என அக்கம் பக்கத்தில் இருந்த வீரர்கள் மற்றும் களத்தில் இருந்த நடுவர் வேகமாக வந்து தலையிட்டு சண்டை போடவேண்டாம் என அட்வைஸ் கொடுத்து பிரித்து வைத்தனர்.
நடுவர்கள் வந்து சொன்ன பிறகு இருவருமே சைலண்டாக அப்டியே திரும்பினார்கள். இருப்பினும் திடிரென இருவரும் களத்தில் நின்று கொண்டு இருக்கும்போதே வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…