[Image Source : IANS]
கில் மாதிரி ஒரு பேட்ஸ் மேன் எங்கள் அணியிலும் கடைசி வரை இருந்திருந்தால் இந்த ஆடுகளத்தில் இது எட்டக்கூடிய இலக்குதான் என ரோஹித் பேச்சு.
ஐபிஎல் தொடரில் நேற்று குவாலிபையர் 2வது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 129 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். அதுமட்டுமட்டுமில்லாமல், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி வீரர் சுப்மன் கில் 3 சதங்களை விளாசியுள்ளார்.
இப்போட்டியில் குஜராத் அணி மும்பை அணியை வீழ்த்தி, 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி சென்னை அணியுடன் மோதவுள்ளது. குஜராத் அணியுடனான தோல்விக்கு பிறகு பேசிய மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, இது ஒரு சிறந்த போட்டி. விக்கெட் மிகவும் நன்றாக இருந்தது. சுப்மான் கில் நன்றாக பேட்டிங் செய்தார்.
அவர்கள் 25 ரன்கள் கூடுதலாகப் எடுத்தனர். இருப்பினும், எங்களிடம் இருந்த பேட்டிங் எங்களுக்கு சாதகமாக இருந்தது. கிரீனும், சூர்யாவும் நன்றாக பேட்டிங் செய்தனர். ஆனால், பவர்பிளேயில் நாங்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம், அது போன்ற இலக்கை அடைய, ரன் ரேட் மிக அவசியம். கடைசி வரை ஷுப்மான் எப்படி பேட் செய்தாரோ, அதே போல் ஒரு பேட்டர் எங்களுக்கு தேவைப்பட்டது.
கில் மாதிரி ஒரு பேட்ஸ் மேன் எங்கள் அணியிலும் கடைசி வரை விளையாடியிருந்தால், இந்த ஆடுகளத்தில் இது எட்டக்கூடிய இலக்குதான். குஜராத் சிறப்பாக விளையாடியது. நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை, 3வது இடத்தைப் பிடித்தது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது, எங்கள் பேட்டிங் மிகப்பெரிய பாசிட்டிவாக இருந்தது. எனவே, சுப்மான் கில் மிக சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். சுப்மன் கில்லின் ஃபார்ம் இனிவரும் போட்டிகளும் தொடர வேண்டும், தொடரும் என நம்புகிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…