இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையே 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதத்தால் 396 ரன்கள் குவித்தது. இதையடுத்து இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்தை 253 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். அடுத்து 143 ரன்கள் முன்னிலை உடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தால் 255 ரன்கள் எடுத்தனர். இதனால் இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
FIFA உலகக்கோப்பை 2026… அட்டவணை வெளியானது..!
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் இரண்டாவது நாளில் ஃபீல்டிங் செய்யும் போது சுப்மன் கில் வலது கையின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. எனினும், காயம் அவ்வளவாக பெரிதாக இல்லாததால், போட்டியின் மூன்றாவது நாளில் பேட்டிங் செய்து சுப்மன் கில் சதம் அடித்தார். இருப்பினும், இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தில் கில்லுக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தில் சுப்மன் கில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் களத்தில் உள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் 147 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். இது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 10-வது சதமும், டெஸ்ட் வாழ்க்கையில் 3-வது சதமும் ஆகும். இதன் போது கில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை விளாசினார். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே 3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர் சுப்மன் கில் கலந்துகொள்வாரா ..? என்பது வருகின்ற நாள்களில் தெரியவரும்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…