இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள இந்திய அணி தொடக்கத்தில் இருந்து அருமையாக விளையாடி வருகிறது. முதலில் வந்த ருத்ராஜ் மற்றும் சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடியது. ஒரு பக்கம் கில் அதிரடியாக விளையாடினார். மற்றோரு பக்கம் நின்று கொண்டு இருந்த ருத்ராஜ் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பிறகு களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி இருவருமே சதம் அடித்தனர். சுப்மன் கில் 97 பந்துகளில் 104 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தனர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்தனர்.
பிறகு, ஷ்ரேயாஸ் 105 ரன்களில் மேத்யூ ஷார்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் அவுட் ஆகி வெளியே சென்ற சில நிமிடங்களிலே சுப்மன் கில்லும் மேத்யூ ஷார்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருப்பினும் இவர்களுடைய அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
காயத்திற்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் சரியாக விளையாடவில்லை எனவும், அவரை அணியில் எடுத்தது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் இன்று நடைபெறும் போட்டியில் தன்னுடைய அதிரடி சதம் மூலம் ஷ்ரேயாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…