உலகக்கோப்பை அரையிறுதி: Retired hurt ஆகி வெளியேறினார் சுப்மன் கில்!

Subman Gill

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து அதிரடியாக விளையாடி வருகிறது.

இந்திய தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பா தொடக்கத்தை கொடுத்தனர். இதில் குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். பின்னரே 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரோஹித் ஷர்மா விக்கெட்டை இழந்து வெளியேறினார். மறுபக்கம் நட்சத்திர பேட்ஸ்மேன் கிங் கோலி களமிறங்க அரங்கமே அதிர்ந்தது.

அரையிறுதியில் அதிரடி பேட்டிங்.! ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா.!

ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். கோலி ஒருபக்கம் நிதானமாக விளையாட, கில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி வந்தார். அரைசதம் அடித்து அதிரடியாக விளையாடி வந்த சுப்மன் கில் (79* ரன்கள்) திடீரென காலில் ஏற்பட்ட வலி (தசைப்பிடிப்பு) காரணமாக Retired Hurt ஆகி பெவிலியன் திரும்பினார்.

65 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்ஸ் விளாசி 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வெளியேறினார். அவர் உடல் நிலை சீரானதும் மீண்டும் விளையாடுவார் என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, விராட் கோலியுடன், ஸ்ரேயாஷ் அய்யர் ஜோடி சேர்ந்து அணிக்கு ரன்களை குவித்து வருகின்றனர். இதில், விராட் கோலி தனது அரை சதத்தை பூர்த்தி செய்து விளையாடி வருகிறார். தற்போது, கோலி 74 ரன்னுடனும், ஸ்ரேயாஷ் அய்யர் 23 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்