ஐசிசி ஆடவர் உலகக்கோப்பையில் நடைபெறும் இந்த நேரத்தில் சமீபத்திய ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டிங் தரவரிசையில் உலகின் நம்பர் பேட்ஸ்மேனாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பாபர் அசாம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு முதலிடத்தை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் தட்டி பறித்தார். அதே சமயம், ஒருநாள் போட்டியின் நம்பர்-1 பந்துவீச்சாளராக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டுளளார்.
நம்பர்-1 பேட்ஸ்மேன் சுப்மன் கில்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட சமீபத்திய ஒருநாள் தரவரிசையில் சுப்மன் கில் நம்பர்-1 பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாபர் அசாம் கடந்த 951 நாட்கள் முதல் இடத்தில் இருந்தநிலையில் அவரை பின்னுக்கு தள்ளி சுப்மன் கில் உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். சுப்மன் கில் 830 ரேட்டிங் புள்ளிகளையும், பாபர் அசாம் 824 ரேட்டிங் புள்ளிகளையும் பெற்றுள்ளார். அதே நேரத்தில், விராட் கோலி 770 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 739 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களில் சிராஜ் நம்பர்-1:
ஒருநாள் பந்துவீச்சாளர்களில் முகமது சிராஜ் நம்பர்-1 ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிராஜ் 709 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் உலகக் கோப்பையில் அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில், முகமது ஷமி டாப்-10 ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்குள் வந்துள்ளார். ஷமி 635 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். நடப்பு உலகக் கோப்பையில் விளையாடிய ஷமி 4 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளும் அடங்கும். ஷமியைத் தவிர குல்தீப் யாதவ் நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.
நம்பர்-1 ஆன இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியல்:
சுப்மன் கில்லுக்கு முன், மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியயலில் நம்பர்-1இடத்தை பிடித்தார். அதே நேரத்தில், விராட் கோலி மற்றும் எம்.எஸ் தோனியும் இந்த சாதனைகளை படைத்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு ஷுப்மான் கில் வேகமாக ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் நம்பர்-1 பேட்ஸ்மேன் ஆனார். தற்போது இந்திய அணி ஒருநாள் போட்டியிலும் நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…