ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச்சுற்று GT vs MI போட்டியில், முதலில் பேட் செய்த குஜராத் அணி 227/3 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி, குஜராத் அணியில் முதலில் களமிறங்கிய விருத்திமான் சாஹா 18 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அணிக்கு நல்லத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தார். அதன்பின் சாய் சுதர்சன் களமிறங்கினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஒருபுறம் சாய் சுதர்சன் பொறுப்பாக விளையாட, சுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ஹர்திக் பாண்டியா, சாய் சுதர்சன் ஜோடி ரன்கள் எடுக்க, சுதர்சன் காயம் காரணமாக வெளியேறினார்.
இறுதியில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷித் கான் களத்தில் நிற்க, குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 129 ரன்களும், சாய் சுதர்சன் 43 ரன்களும், ஹர்திக் பாண்டியா 28* ரன்களும் குவித்தனர்.
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…