தோனி தலைமையில் இந்திய அணிக்காக அறிமுகமான ஸ்டுவர்ட் பின்னி ஓய்வு அறிவிப்பு..!

மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்த ரோஜர் பின்னியின் மகன் ஸ்டூவர்ட் பின்னி. இவர் இங்கிலாந்துக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். இந்தியாவுக்காக 6 டெஸ்ட், 14 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் ஸ்டூவர்ட் பின்னி விளையாடினார். ஸ்டூவர்ட் பின்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் 194 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 230 ரன்கள் மற்றும் 20 விக்கெட்டுகள், டி 20 போட்டியில் 35 ரன்கள் மற்றும் 1 விக்கெட் பறித்துள்ளார்.
பின்னி 95 முதல் வகுப்பு போட்டிகளில் 4,796 ரன்கள் எடுத்து 148 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 37 வயதான ஸ்டூவர்ட் பின்னி 2016 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி 20 போட்டியில் 6 பந்துகளில் 5 சிக்ஸர் கொடுத்தார். கடந்த 2016 -ஆம் ஆண்டு 27 ஆகஸ்ட் அன்று நடந்த டி 20 போட்டியில், மேற்கிந்திய தீவு பேட்ஸ்மேன் எவின் லூயிஸ், ஸ்டூவர்ட் பின்னி ஓவரில் தொடர்ச்சியாக 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்தார்.
இருப்பினும், கடைசி பந்திலும் எவின் லூயிஸ் சிக்ஸர் அடிக்க தவறிவிட்டார். ஸ்டூவர்ட் பின்னி அந்த ஓவரில் 32 ரன்களை கொடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள், ஒரு அகல பந்து மற்றும் ஒரு ரன் அடங்கும். ஸ்டூவர்ட் பின்னிக்கு, அந்த டி 20 போட்டி அவரது சர்வதேச வாழ்க்கையில் கடைசி போட்டியாக அமைந்தது. இதற்குப் பிறகு, ஹர்திக் பாண்டியாவின் வருகையுடன், ஸ்டூவர்ட் பின்னி டீம் இந்தியாவிலிருந்து ஒதுக்கப்பட்டார்.
ஸ்டூவர்ட் பின்னி சில சந்தர்ப்பங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். கடந்த 2014 ஆண்டு 17 ஜூன் அன்று, ஸ்டூவர்ட் பின்னி வங்கதேசத்திற்கு எதிராக மிர்பூரில் நடந்த ஒருநாள் போட்டியில் வெறும் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
ஸ்டூவர்ட் பின்னிக்குப் பிறகு, முன்னாள் இந்திய கேப்டனும், லெக் ஸ்பின்னருமான அனில் கும்ப்ளே சிறந்த பந்துவீச்சு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 1993 இல் கொல்கத்தாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 12 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் பற்றி பேசுகையில், ஸ்டூவர்ட் பின்னி மொத்தம் 95 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் மொத்தம் 880 ரன்கள் எடுத்துள்ளார். 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவர் 2019 -ல் கடைசியாக ஐபிஎல் விளையாடினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025