டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22-வது போட்டியில் டெல்லி – பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இதைதொடர்ந்து, முதலில் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணியில் அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 75* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றனர். 172 ரன்கள் இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பிருத்வி ஷா இருவரும் களமிறங்கினார்.
ஆட்டம் தொடக்கத்திலே தவான் 6 ரன்களில் வெளியேற இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித் ஏபி டிவிலியர்ஸிடம் கேட்சை கொடுத்து 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார். நிதானமாக விளையாடிய வந்த பிருத்வி ஷா 21 ரன்னில் வெளியேற, பின்னர் ரிஷாப் பண்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கை சற்று உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 22 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து மத்தியில் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மியர் 23 பந்துகளில் 4 சிக்ஸர், இரண்டு பவுண்டரி அடித்து அரை சதம் விளாச இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கடைசி வரை களத்தில் ரிஷப் பண்ட் 58* ரன்களும், ஹெட்மியர் 53* ரன்களுடன் நின்றனர். டெல்லி அணியும், பெங்களூர் அணியும் தலா 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் பெங்களூர் அணி 5 வெற்றியும், ஒரு தோல்வியும் தழுவி 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி நான்கு வெற்றியும், இரண்டு தோல்வியைத் தழுவியுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…