டி20I : டி20 உலகக்கோப்பையின் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், பப்புவா நியூ கினி அணியும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பப்புவா நியூ கினி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி விளையாடியது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெரிதளவு தடுமாறியது. அதனை தொடர்ந்து அந்த அணியின் சேசே பௌவ் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். அவர் 43 பந்துகளை 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும், அந்த அணியில் வேறு எந்த வீரரும் சரிவர விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரஸ்ஸல் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். மேலும், 137 என்ற எளிய இலக்கை எடுப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள் களமிறங்கினார்கள். அதன் படி முதல் பந்திலேயே தொடக்கவெரர் சார்லஸ் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.
அதனை தொடர்ந்து நிக்கோலஸ் பூரனும், பிராண்டன் கிங் சற்று நிதனமாக விளையாடினார்கள் இருந்தாலும் பூரன் 27 ரன்களுக்கும், கிங் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின் ருஸ்ஸலும் (15 ரன்கள்), ரோஸ்டன் சேஸ்ஸும் (42 ரன்கள்) நின்று விளையாடி 19 ஓவர்கள் முடிவில் வெற்றியை தேடி தந்தனர்.
பப்புவா நியூ கினி அணியும் தங்களது முழு ஈடுபாடையும் கொடுத்து போராடி தோல்வியடைந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த டி20 உலகக்கோப்பையில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…