விக்கெட்டுகளை வீழ்த்த போராட்டம்..! அடித்து நொறுக்கி வெற்றியை ருசித்த சேப்பாக்..!
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய CSG vs ITT போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள், கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை 120 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரதோஷ் பால் பொறுப்பாக விளையாடினார்.
அவருடன் களமிறங்கிய ஜெகதீசன் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அபராஜித் களமிறங்கி நிதானமாக விளையாடினார். ஒருபுறம் பிரதோஷ் 25 ரன்களில் வெளியேற, அதன்பின் களமிறங்கிய சஞ்சய் யாதவ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஹரிஷ் குமார், அபராஜித் இணைந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.
முடிவில், 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்த சேப்பாக் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக பாபா அபராஜித் 46* ரன்களும், பிரதோஷ் பால் 25 ரன்களும், சஞ்சய் யாதவ் 22 ரன்களும், குவித்துள்ளனர். திருப்பூர் அணியில் அஜித் ராம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.