டக்வொர்த் லீவிஸ் (DLS) முறையில் பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

Published by
murugan

உலகக்கோப்பை தொடரில் 35-ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கான்வே, ரச்சின் ரவீந்திரன் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் நிதானமாக விளையாடி வந்த கான்வே 35 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் கேப்டன் வில்லியம்சனுடன் கைகோர்த்தார் ரச்சின் ரவீந்திரன் இருவரும் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணியை திணறவைத்தனர். இருப்பினும் சிறப்பாக விளையாடிய கேப்டன் வில்லியம்சன் சதத்தை தவற விட்டு 79 பந்தில் 95 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இவர்கள் கூட்டணியில் 180 ரன்கள் சேர்க்கப்பட்டது. மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரன், கேப்டன் வில்லியம்சன் அவுட் ஆன அடுத்த இரண்டு ஓவரில் 108 ரன்கள்  விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் இறங்கிய சாப்மேன் 29, டேரில் மிட்செல் 39,  க்ளென் பிலிப்ஸ் 41 மற்றும் சான்ட்னர் 26* ரன்கள் விளாச  இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 402 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் 4 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன்பின், களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம், தொடக்க வீரர் ஃபகார் ஜமான் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். இதற்கிடையில் பாகிஸ்தான் அணி 21.3 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்து இருந்தபோது பெங்களுருவில் மழை குறிக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது களத்தில் ஃபகார் ஜமான் 106* ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 47* ரன்களுடனும் இருந்தனர். மழை நின்ற உடன் மீண்டும் போட்டி தொடங்கியது. பின்னர் DLS முறைப்படி பாகிஸ்தான் அணி வெற்றி பெற 41 ஓவர்களுக்கு 342 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் மீதம் உள்ள 19.3 ஓவருக்கு 182 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 26 -வது ஓவர் வீசும்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி மீண்டும் நிறுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் 1 விக்கெட் இழந்து 200 ரன்கள் எடுத்து இருந்தது. களத்தில் ஃபகார் ஜமான் 126* ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 66* ரன்களுடனும் இருந்தனர். பாகிஸ்தான் வெற்றி பெற 93 பந்தில் 142 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக டக்வொர்த் லீவிஸ் (DLS) முறையில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது.

புள்ளி பட்டியலில் இரு அணிகளும் 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 4-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 5-வது இடத்திலும் அடுத்தடுத்து உள்ளது.

 

 

Published by
murugan

Recent Posts

ஐபிஎல்-ல் களமிறங்கும் ‘விலைபோகாத’ கேன் வில்லியம்சன்!

டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…

14 minutes ago

திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!

உத்திரபிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனு என்பவருடைய மகன் தீபான்ஷூவுக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது.…

30 minutes ago

இந்த மாதிரி நடிங்க ப்ளீஸ்…விக்ரமுக்கு வேண்டுகோள் வைத்த எஸ்.ஜே.சூர்யா!

சென்னை : விக்ரம் நடித்துள்ள வீரதீரசூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

1 hour ago

எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல்போட்டியிலேயே பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள…

2 hours ago

“ஆடு நனைகிறதென ஓநாய் கவலைப்பட வேண்டாம்” தங்கம் தென்னரசுக்கு ஜெயக்குமார் பதிலடி!

சென்னை : இன்று  தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர்…

3 hours ago

சட்டப்பேரவையில் திமுக vs அதிமுக : “கவனமாக இருங்கள்.,” “எங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..,”

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இன்று பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை…

3 hours ago