INDvsENG : 6 மாதம் பந்து வீசல ..! இப்போ முதல் பந்துல போல்டு ..! இந்தியாவின் தூணை உடைத்த ஸ்டோக்ஸ் ..!
INDvsENG : இந்தியா இங்கிலாந்து உடனான 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. களமிறங்கிய முதல் 5 வீரர்களும் அரை சதத்தை கடந்துள்ளனர். மேலும், இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரோஹித் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் வாய்ப்பாக அமையும் அனைத்து பந்தையும் விளாசினர்.
Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய அஸ்வின் ..!
இருவரும் எல்லா பவுலர்களின் பந்து வீச்சையும் அடித்ததுடன், பீல்டர்களை திக்கு முக்காட வைத்து சதத்தையும் பூர்த்தி செய்தனர். இதனால் வேறு வழி இன்றி இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு அதாவது கிட்ட தட்ட 6 மாதங்களுக்கு பிறகு பந்து வீச முடிவு செய்தார்.
Read More :- ICC : இவங்க தான்பா ..! 30-வயசுக்கு மேல அதிக சதம் அடிச்சவங்க ..!
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சரி, 20 ஓவர் கிரிக்கெட்டிலும் சரி, களத்தில் உள்ள பேட்ஸ்மேன்கள் சிறப்பாக அனைத்து பவுலர்களையும் அடித்து விளையாடி கொண்டிருந்தால் பந்து வீசும் அணியினர் புதியதாக ஒரு யுக்தியை கை ஆளுவார்கள். அது என்னவென்றால் ஆல்-ரவுண்டரை (குறிப்பாக பேட்டிங் ஆல் ரவுண்டர் ) பந்து வீச சொல்வார்கள். அப்படி செய்யும் பொழுது சீராக விளையாடு வீரர்கள் தடுமாறி விக்கெட் இழக்க ஒரு வாய்ப்பாக அமையும். அதே யுக்தியை இன்று பென் ஸ்டோக்ஸ் கை ஆண்டார்.
Read More :- INDvsENG : போதும் எப்படியாச்சும் அவுட் ஆயிருங்க ..! வலுவான நிலையில் இந்திய அணி ..!
ஸ்டோக்ஸ் 6 மாதங்களுக்கு பிறகு பவுலிங் செய்ய வந்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே பந்தை எதிர் கொண்ட சதம் விளாசிய ரோஹித் சர்மா போல்டு ஆனார். இந்திய அணியில் பெரும் தூணாக அமைந்த அந்த கூட்டணியை பென் ஸ்டோக்ஸ் உடைத்தார். இதனால் அதற்கு பிறகு களமிறங்கிய வீரர்களும் நன்றாக விளையாடினாலும். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்கள். மேலும், இன்றைய நாளில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
Ben Stokes your beauty ????
Rohit Sharma on his way after well made 1️⃣0️⃣3️⃣ ????#INDvsENG #RohitSharma #BenStokes #INDvENG pic.twitter.com/BdWFrnhfdh— Richard Kettleborough (@RichKettle07) March 8, 2024