ஆஸ்திரேலியா அணியில் அடுத்த குழப்பம்…!2019 உலககோப்பை போட்டிக்கு இவர் இருக்காரா..?இல்லையா..???
கடும் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 2019 உலககோப்பை போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியை எதிர்கொள்ள அணியில் நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடையை நீக்க மறுத்துவிட்டது.
இதனிடையே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் மீது 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.மற்றொரு வீரரான பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில் ஸ்மித் மீதான தடை வருகிற மார்ச் மாதம் வரை நீடிப்பதால் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் ஸ்மித் விளையாடி வந்தார்.ஆனால் அதில் விளையாடியதில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஸ்மித்துக்கு உருவாகியுள்ளது. இதன்பிறகு ஆறு வார காலம் ஓய்வு அவருக்கு தேவைப்படுகிறது.
இந்த காயம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி தொடரிலும் இருந்து விலகியுள்ள ஸ்மித் இந்தியாவில் மார்ச் 23 தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியகளிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.காயம் காரணமாக தொடர் ஓய்வில் இருக்கும் அவரால் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் 2019 உலகக் கோப்பைப் போட்டியில் நேரடியாக ஸ்மித் எப்படி பங்கேற்பார் என்ற கேள்வி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்துள்ளது.