‘நான் அவசரப்படவில்லை…’ தனது ஓய்வு குறித்து மனம் திறந்தார் ஸ்டீவ் ஸ்மித்!

Steve Smith

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி, பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. நாளை நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸும், துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், இணை துணை கேப்டனாக டிராவிஸ் ஹெட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், குறிப்பாக ஒரே ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளது ஸ்டீவ் ஸ்மித்துக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தனது ஓய்வு தொடர்பாக முடிவு குறித்து நான் அவசரப்படவில்லை என்று ஸ்டீவ் ஸ்மித் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த ஆண்டு ஒரு பிஸியான ஆண்டாக அமைந்துள்ளது.

விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்.! டி20-ல் புதிய அத்தியாயம்.!

தனது மனதை புத்துணர்ச்சியடைய குடும்பத்துடன் சிறிது நேரம் செலவழிக்க இடைவேளை தேவைப்படுவதாக உணர்கிறார். கிரிக்கெட்டில் எந்தவொரு வடிவத்திலிருந்தும் ஓய்வு பெறுவது தொடர்பான எந்த முடிவையும் எடுக்க நான் அவசரப்படவில்லை என்றும் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க அவசரப்படவில்லை எனவும் கூறினார்.

மேலும், ஒரு வாரம் வீட்டிலேயே இருந்துவிட்டு, முடிந்தவரை மனதையும், உடலையும் ரிலாக்ஸ் செய்து, புத்துணர்ச்சியுடன் பாகிஸ்தான் எதிரான தொடருக்குத் தயாராவது நன்றாக இருந்தது. ஆனால், இப்போது நான் ஒரு நல்ல இடத்தில் இருப்பதாக உணர்கிறேன். ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக இருப்பதாகவும், சில சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

எனவே,  மிகவும் பிஸியான கால அட்டவணையில் இது சவாலானதாக இருக்கலாம். ஆனால் விளையாட்டில் இருந்து விலகி உங்கள் மனப் பக்கத்தை திரும்பப் பெறுவதற்கு சில நாட்கள் ஓய்வு தேவைப்படும், அப்போதுதான் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட முடியும். அது தான் முக்கியம் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்