BGT2023: 4-வது டெஸ்டிலும் ஸ்டீவ் ஸ்மித் தான் கேப்டன்.!

Default Image

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டிலும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியில், ஸ்டீவ் ஸ்மித்  கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 3- வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தனது தாயின் உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார்,  இன்னும் அவர் சிட்னியில் இருந்து இந்தியா திரும்பாததால் 4-வது போட்டியிலும் கம்மின்ஸ் விளையாடமாட்டார்.

இந்த நிலையில் 3-வது போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் இறுதிப்போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இந்த 4 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்பைப்பெற கடைசிப்போட்டியில் இந்தியா வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் 4-வது போட்டி வரும் மார்ச்-9 ஆம் தேதி அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kerala Govt Pongal holidays
Sanjay Bangar Sanju Samson
pongal (1) (1)
jallikattu price
JammuKashmir
rain heavy