ஐபிஎல் : அடுத்த ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஸ்டீவ் ஸ்மித் கலந்து கொள்ளப் போகிறார் என ஒரு தகவல் பரவலாகப் பரவி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் தொடரில் கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதற்குக் காரணம் ஐபிஎல் அணிகள் மிகப்பெரிய கிரிக்கெட் நட்சத்திரத்த வீரர்களை புறக்கணித்ததால், கடந்த சில ஆண்டுகளாக ஏலத்தில் ஏராளமான வீரர்கள் விற்கப்படாமல் போனார்கள். அதில் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தும் ஒருவர் தான்.
தற்போது, இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் தனது பெயரைக் கொடுப்பதாக ஸ்டீவ் ஸ்மித் கோட் ஸ்போர்ட்ஸ் (CODE Sports) என்ற தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். அந்த பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் மீண்டும் ஒருமுறை ஐபிஎல் தொடரில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். நான் எனது பெயரை ஏலத்தில் வைப்பேன்” என ஸ்டீவ் சுமித் கூறி இருக்கிறார்.
கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸதன் ராயல், டெல்லி கேபிட்டல்ஸ் எனப் பல அணிகளில் விளையாடி அசத்தி இருக்கிறார். இவரது தனித்துவமான ஆட்டத்திற்குத் தனிப்பட்ட ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
இதனால், ஐபிஎல் தொடர்க்கு திரும்பும் அவரது இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகவே இருக்கிறது. மேலும், ஏலத்தில் அவரை எடுப்பதற்கு ஐபிஎல் அணிகள் போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஐபிஎல் தொடரில் மட்டும் 103 போட்டிகளில் விளையாடி அதில் 2485 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார். அதில் 1 சதமும், 11 அரை சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…