டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார் .
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விளையாடி வருகிறது.இதில் 3 டி -20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கும்.முதலில் நடந்த டி-20 தொடர் நடைபெற்றது.இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.பின்னர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 7000 ரன்களை கடந்து டெஸ்ட் போட்டியில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.இவர் 126 இன்னிங்ஸில் 7,000 ரன்களை கடந்து இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் சாதனையை முறியடித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். வாலி ஹேமண்ட் 131 இன்னிங்ஸில் 7,000 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.இந்த சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.மேலும் 7000 ரன்களை கடந்த 11-வது ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஆவார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…