CSK: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. இந்த சூழல், யாரும் எதிர்பார்க்காத நிலையில் சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை அணியின் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்தது.
ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக 5 சாம்பியன் கோப்பைகளை வென்ற தோனி, கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு விட்டுகொடுத்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் மாற்றம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, சென்னை அணியின் எதிர்காலத்தை கருதி கேப்டன் பொறுப்பை இளம் வீரரான ருதுராஜிடம் ஒப்படைத்துள்ளார் எம்எஸ் தோனி. புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என தோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ல் ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம்.
தற்போது ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ரவீந்திர ஜடேஜா முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார் என விளக்கமளித்தார். மேலும், இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் எம்எஸ் தோனி விளையாடுவார் என நான் நம்புகிறேன் எனவும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்டீபன் பிளமிங் பதிலளித்தார். இதனிடையே, எம்எஸ் தோனி கேப்டன் பதவியை ருதுராஜிடம் ஒப்படைப்பது குறித்து கேப்டனின் போட்டோஷூட்டுக்கு சற்று முன்புதான் அறிந்தேன் என சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…