நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சின்னசாமிமைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம் நடித்திருந்தார். விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த இந்த போட்டி இறுதியாக சுப்மான் கில் சதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இதனால் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில், போட்டியை நேரில் கண்டு களிக்க வந்த கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதனை அடுத்து போட்டி முடிந்த பிறகு ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில் ” பரபரப்பான அரசியல் நடவடிக்கைகளுக்குப் பிறகு
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஐபிஎல் போட்டியை பார்த்து ரசித்தேன்.
பெங்களூர் அணி இந்த முறை தோற்றிருக்கலாம், ஆனால் அவர்கள் ஒரு சிறந்த ஆட்டத்தால் அனைவரின் மனதையும் வென்றனர். எப்படி இருந்தாலும் ஆர்.சி.பி தான் எனக்கு பிடித்த அணி. கண்டிப்பாக பெங்களூர் அணி கோப்பையை வெல்லும் காலம் வரும் விரக்தியடைய வேண்டாம், நம்பிக்கையுடன் இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…