இருங்க இனிமே தான் இருக்கு! விராட் கோலி பற்றி ஹர்பஜன் சிங் சொன்ன விஷயம்?

harbhajan singh and virat kohli

விராட் கோலி : இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காத நிலையில், படிபடியாக பழைய பார்முக்கு திரும்பி வருகிறார். விராட் கோலி பார்ம் பற்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஹர்பஜன் சிங் ” விராட் கரீபியன் தீவுகளுக்கு வந்ததில் இருந்து, பந்து அவருடைய பேட்டிற்கு நன்றாக வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பந்து அவருடைய பேட்டின் நடுப்பகுதியில் தான் படுகிறது. இன்னும் அவர் பெரிய ரன்களை அடிக்கவில்லை என்றாலும் கூட டி20களில் நீங்கள் பார்க்க வேண்டியது 20 மற்றும் 30 களில் தாக்கத்தை ஏற்படுத்துவதை தான்.

கடந்த சில போட்டிகளாக விராட் கோலி அதனை சரியாக செய்து வருகிறார். அவர் செட் ஆனவுடன், அவர் பெரிய ஸ்கோர் செய்ய முடியும், அது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் என்று நம்புகிறேன். இப்போது தான் அவர் ஆரம்பித்து இருக்கிறார். இனிமேல் வரும் போட்டிகளில் எல்லாம் அவருடைய அதிரடியான ஆட்டத்தை நாம் எதிர்பார்க்கலாம். கண்டிப்பாக வரும்” எனவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஹர்பஜன் சிங் ” இப்போது மட்டும் இல்லை எப்போதும் கோலி சிறந்த பார்மில் தான் இருக்கிறார். மைதானம் சரியாக அமையவில்லை என்றால் சில வீரர்கள் இப்படி ஒரு சில ஆட்டங்களில் தடுமாற்றம் அடைவது வழக்கம் தான். உலகக்கோப்பை தொடங்கியதில் இருந்து கோலி தனது முந்தைய ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 28 பந்துகளில் 37 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார்” எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்