பெண்களை பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் கலந்துகொண்டனர்.அதில் ஹர்த்திக் பாண்டியா பெண்கள் குறித்தும் இனவெறியை தூண்டும் வகையிலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.இதனால் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்தது.விசாரணை நடத்திய பிறகு தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால் அதேபோல் ஆஸ்திரேலிய தொடரில் இருவரும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் பெண்களை பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(bcci).அதேபோல் உயிரிழந்த 10 துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும். பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக ரூ.10 லட்சத்தை அளிக்க வேண்டும்.அதேபோல் 4 வாரத்திற்குள் அபராதத்தை செலுத்தவில்லை என்றால் போட்டிக்கான ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தெரிவித்துள்ளது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…