நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரை இழந்த இலங்கை அணி.!

113 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தத நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

New Zealand 2nd ODI

ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் உள்ள செடன் மைதானத்தில் நடைபெற்றது. மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி 37 ஓவர்களில் மட்டுமே விளையாட முடிந்தது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. மார்க் சாப்மேனுடன் இணைந்து ரச்சின் ரவீந்திர 112 ரன்கள் எடுத்தார். ரச்சின் 79 ரன்களும், சப்மேன் 63 ரன்களும் எடுத்தனர்.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திர அபாரமாக விளையாடி 63 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். 37 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 255 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து, 256 ரன்கள் என்ற இலக்கை நோக்கி  இலங்கை அணி களமிறங்கியது.

இலங்கை அணி பந்துவீச்சு சார்பாக, மகேஷ் தீக்ஷனா 8 ஓவர்களில் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ 1 விக்கெட்டையும், இஷான் மலிங்க ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.

இலங்கை அணி 5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 64 ரன்கள் எடுத்தார். இது தவிர ஜெனித் லியனகே 22 ரன்கள் எடுத்தார். 37 ஓவர்களில் இலங்கை வெற்றிக்கு 256 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கை அணி, முழு ஓவரையும் கூட ஆட முடியாமல் 30.2 ஓவரில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

இதன்  மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 2வது போட்டியில் ரச்சன் ரவீந்திரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆக்லாந்தில் ஜனவரி 11-ம் தேதி நடக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்