இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி கடுமையாக போராடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னர் இரண்டாவது போட்டி நடைபெற்றது .இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இலங்கை அணி வெறும் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 128 ரன்னிற்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.
இதன் காரணமாக 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அற்புதமாக ஆடியது. முதல் இரண்டு விக்கெட்டுகள் எளிதாக விழுந்தாலும் அடுத்து வந்த குஷல் மற்றும் பெர்னான்டோ ஆகியோர் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை துவம்சம் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெற்றி பெற வைத்தனர். இதன் மூலமாக 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
மேலும் தென்னாப்பிரிக்கா மண்னில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையைப் பெற்றது இலங்கை அணி.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…