#SLvIND: டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு..!

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று 03:00 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.
இப்போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி:
தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர் ), மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார், புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்) ஆகியோர் உள்ளனர்.
இலங்கை அணி:
அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா (விக்கெட் கீப்பர் ), பானுகா ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தாசுன் ஷானகா (கேப்டன்), வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உதனா, துஷ்மந்தா சாமிரா, லக்ஷன் சந்தகன் ஆகியோர் உள்ளனர்.