SLvsIND : இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்று பயணத்தொடரில் இதுவரை டி20 தொடர் நடைபெற்று அந்த தொடரை இந்தியா 3-0 கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரானது நேற்று முன்தினம் தொடங்கியது.
அந்த போட்டியானது டிராவில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இன்றைய நாளில் 2-வது ஒருநாள் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி இலங்கை வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினார்கள், தொடக்க வீரரான பத்தும் நிஷன்கா போட்டியின் முதல் பந்திலையே தனது விக்கெட்டை இழந்து ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து அவிஷ்க பெர்னாண்டோவும், குசல் மெண்டிசும் இணைந்து கூட்டணி அமைத்து அணியின் ரன்களை படிப்படியாக உயர்த்தினார்கள். இந்த இருவரின் பார்ட்னர்ஷிப்பில் இலங்கை அணி 74 ரன்களை கடந்திருந்தது.
அதன் பிறகு சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளும் விழதொடங்கின, இறுதியில் கவிந்து மெண்டிஸ் ஒரு முனையில் நிதானத்துடன் விளையாட இலங்கை அணியின் ஸ்கோரானது 200-ஐ கடந்தது.
கடைசியில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பெர்னாண்டோவும், மெண்டீசும் 40 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
அதை தொடர்ந்து 241 ஒரு ரன்கள் அடித்தால் வெற்றி என இந்திய அணி களமிறங்கியது, எப்போதும் போல தொடக்க வீரரான கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக தனது ஆட்டத்தை தொடங்கினார்.
மறுமுனையில் கில் நிதானத்துடன் அவருக்கு உறுதுணையாக நின்று விளையாடினார். தொடக்கத்தை நன்றாகவே தொடங்கிய இந்திய அணி கேப்டனான ரோஹித் சர்மா 64 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தவுடன் படிப்படியாக விக்கெட்டுகளை பறிக்கொடுத்து கொண்டே இருந்தது.
அதில் தில் 35 ரன்களுக்கும், விராட் கோலி 14 ரன்களுக்கும், சிவம் தூபே 0 ரன்களுக்கும், ஷ்ரேயஸ் ஐயர் 7 ரன்களுக்கும், கே.எல் ராகுல் 0 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை இழந்தனர்.
ஆனால் அதன் பிறகு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே களத்தில் விளையாடிக் கொண்டிருந்த அக்சர் பட்டேலுடன் இணைந்து பொறுமையாக தட்டி தட்டி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார்.
அதன்பின் துரதிஷ்டவசமாக அக்சர் பட்டேல் 44 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட் இழந்திருந்தது.
இறுதியில்2 அணியின் ஒரே நம்பிக்கையாக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தரும் 40 பந்துகள் பிடித்து 15 ரன்கள் எடுத்திருந்த வேளையில் அவரும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து மிக மோசமாக தடுமாறி விளையாடி வந்தது.
கடைசி வரை போராடிய இந்திய அணியின் பவுலர்கள் போராடியும், இறுதியில் இந்திய அணி 42.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.
இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் காரணமாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…